This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பது எப்படி?

Contraceptive
Written by - Gajalakshmi Udayarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 18, 2026
 உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பது எப்படி?
Likes22 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • பாதுகாப்பற்ற உடலுறவு என்பது எந்தவித கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் குறிக்கிறது, இது திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
  • உடலுறவுக்குப் பிறகு 72 மணி நேரத்திற்குள் அவசர கருத்தடை மாத்திரை (மார்னிங் ஆஃப்டர் பில்) எடுத்துக்கொள்வது அல்லது 5 நாட்களுக்குள் IUD பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க உதவும்.
  • திட்டமிடப்படாத கர்ப்பம் பயம், பதட்டம் ஏற்படுத்தலாம்; துணை, குடும்பம், நண்பர்கள் அல்லது மகப்பேறு மருத்துவரிடம் பேசி சமூக ஆதரவைப் பெறுவது மிக முக்கியம்.
  • உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன தேவை? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
  • நீங்கள் சமீபத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டீர்களா? ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய ஆணுறை பயனற்றதாக இருக்கலாம் அல்லது காலையில் மாத்திரை சாப்பிடுவதைத் தவறவிட்டிருக்கலாம். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பது எப்படி என்பதற்கான குறிப்புகளை நீங்கள் இணையத்தில் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தால், இனி அதைப் பற்றிய பயமோ, கவலையோ வேண்டாம். நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.

  • முதலில், பாதுகாப்பற்ற செக்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். உடலுறவுக்கு முன், உடலுறவின்போது அல்லது அதற்குப் பிறகு எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் எந்த நாளாக இருந்தாலும், விந்து வெளியேறியதா? இல்லையா? என்பதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.

  • நிச்சயமாக, யாரும் திட்டமிடாத கர்ப்பத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அதனால்தான் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இந்த வலைப்பதிவு உங்களுக்கு விவரிக்கிறது.

1. கழிவறையைப் பயன்படுத்துங்கள்

உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க பரிந்துரைக்கப்படுகிறது. உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது விந்தணுவின் தடயங்களை அகற்ற உதவுவது மட்டுமின்றி; இது உங்களை UTI தொற்றுவதில் இருந்து தடுக்கிறது. உடலுறவுக்குப் பின் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு – முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் வரை - உங்களைத் துடைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

2. அவசர கருத்தடை மாத்திரையை (ECP) எடுத்துக் கொள்ளுங்கள்

  • உடலுறவுக்குப் பிறகு அவசர கருத்தடை மாத்திரையை ('மார்னிங் ஆஃப்டர்' மாத்திரை அல்லது பிளான் பி என்றும் அழைக்கப்படுகிறது) எடுத்துக்கொள்வது திட்டமிடாத கர்ப்பத்தைத் தவிர்க்க உதவும். நீங்கள் இதைத் தேர்வுசெய்தால், பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட 72 மணி நேரத்திற்குள் மாத்திரையை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மாத்திரையை எடுத்துக் கொண்டால் அது முழுமையாகப் பலனளிக்காது.

  • இந்த மாத்திரையானது ஸ்பாட்டிங், குமட்டல், உடல்வலி மற்றும் வீக்கம் போன்ற லேசான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இது உங்கள் சாதாரண மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கலாம். மேலும் உங்கள் அடுத்த மாதவிடாயை சற்று முன்னதாகவே ஏற்படுத்தலாம்.

  • இருப்பினும், இவை அவசர கால கருத்தடைகள் மற்றும் உங்கள் வழக்கமான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளுக்கு பதிலாக இவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் (அவை தினசரி உட்கொள்ளலுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன).

3. கருப்பையக சாதனத்தை (IUD) பெறுங்கள்

  • கருப்பையக சாதனம் என்பது காப்பர் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனம். 'டி' வடிவில் இருக்கும், இது கருப்பையின் உள்ளே வைக்கப்பட்டு, திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்க உதவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குள் நீங்கள் IUD ஐ பயன்படுத்தலாம்.

  • IUD ஐ பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கருத்தடை முறைகளில் ஒன்றாகும். உட்செலுத்தப்பட்டவுடன், இது ஒரு தொடர்ச்சியான கருத்தடை முறையாகவும் செயல்படுகிறது. அதாவது நீங்கள் திட்டமிடப்படாத கர்ப்பத்தைப் பற்றி குறிப்பிட்ட காலத்திற்கு கவலைப்பட வேண்டியதில்லை.

  • இருப்பினும், கருப்பை நார்த்திசுக்கட்டி, காப்பர் ஒவ்வாமை மற்றும் வில்சன் நோய் (இரத்தம் உறைவதை கடினமாக்கும் ஒரு கோளாறு) அறிகுறிகளைக் கொண்ட பெண்களுக்கு IUD கள் சிறந்த வழி அல்ல. IUD உங்களுக்கு உகந்த வழியா என்பதை அறிய உங்கள் மருத்துவரை அணுகவும்.

4. சமூக ஆதரவைப் பெறுங்கள்

  • திட்டமிடப்படாத கர்ப்பம் அதிகப்படியான பயம், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உங்களை நீங்களே சரிபார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், இதிலிருந்து வெளியேறவும் உங்கள் துணையுடன் கலந்துரையாடுங்கள். மேலும், இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • நீங்கள் சௌகரியமாக உணரும் மற்றும் உங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் பேசலாம். நீங்கள் யாருடனும் பேச முடியாது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு தெரபிஸ்டை அணுகலாம்.

  • இறுதியாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் பேசுவது மிகவும் உதவியாக இருக்கும்; தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பகிர்வதன் மூலம் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்?

  • இப்போது உங்கள் கேள்விக்கான பதில் உங்களிடம் உள்ளது. உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்ப்பது எப்படி, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனை செய்வதற்கான சரியான நேரத்தை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம்.

  • பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட 2-3 வாரங்களுக்குப் பிறகு நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது நல்லதல்ல. ஏனெனில், உடலில் ஹார்மோன் அளவுகள் கர்ப்பத்தைக் கண்டறியும் அளவுக்கு அதிகமாக இருக்காது.

இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கான கருத்தடை உறைகளை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

அடுத்த முறை உறுதிப்படுத்த வேண்டியவை

  • உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

  • உடலுறவின் போது ஆணுறை கிழிந்தாலோ அல்லது நழுவினாலோ, உடலுறவுக்குப் பிறகு அவசர கருத்தடை மாத்திரையை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • IUD அல்லது வழக்கமான கருத்தடை மாத்திரைகள் போன்ற பிற கருத்தடை முறைகளை பயன்படுத்த விரும்பினா,ல் முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. இறுதி முடிவை எடுப்பதற்கு முன் தகுந்த சோதனைகளை (தேவைப்பட்டால்) செய்து கொள்ளுங்கள்.

  • இருப்பினும், ஆணுறைகள் பால்வினை நோய்களிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவை மாத்திரைகளை விட மிகவும் மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியவை. மேலும், உங்கள் ஹார்மோன்களை எந்த வகையிலும் பாதிக்காது.

  • மொத்தத்தில், திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பதற்கும், பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளவும். அவை சிறந்த வழியாகும்!

பெண்களின் நெருக்கமான ஆரோக்கியத்திற்கு நம்பகமான துணை

உங்கள் தனியுரிமையையும் ஆரோக்கியத்தையும் பேணும் மென்மையான, பாதுகாப்பான தயாரிப்புகள் மூலம் நம்பிக்கையுடன் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

419 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.